அஜய் ராய், மோடி எக்ஸ் தளம்
இந்தியா

வாரணாசி| பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் காங். வேட்பாளர்.. யார் இந்த அஜய் ராய்?

Prakash J

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடைசிக்கட்டமாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அஜய் ராய், பி.எஸ்.பி. சார்பில் ஏ. ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி

இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் முன்னிலையில் உள்ளார். இதனால், பிரதமர் மோடிக்கே காங்கிரஸ் வேட்பாளர் டஃப் கொடுத்து வருகிறார். முதல் இரண்டு சுற்றுகளில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, மோடி 28,719 வாக்குகள் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிக்க: IPL 2025 மெகா ஏலம்| CSK-ல் இருந்து தோனி வெளியேறும் நிலையா? வில்லனாய் மாறும் புதிய விதிமுறை?

யார் இந்த அஜய் ராய்?

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான அஜய் ராய், அம்மாநிலத்தில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளார். முன்னாள் பிஜேபி தலைவரான ராய், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1996 - 2007 ஆண்டுகளுக்கு இடையே தொடர்ச்சியாக மூன்று முறை கோலாஸ்லா தொகுதியில் இருந்து உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காங்கிரஸுக்குத் தாவினார். 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் சேர்ந்த ராய், உ.பி சட்டமன்றத் தேர்தலில் பிந்த்ரா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.

2017ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பிந்த்ராவிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக ராய் தோல்வியடைந்தார். இந்த நிலையில்தான் தற்போதைய தேர்தலில் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று வருகிறார். இவர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2 முறை பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். அதாவது கடந்த 2014, 2019 தேர்தல்களில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அத்தகைய தேர்தல்களில் அஜய் ராய், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மாறாக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தகைய சூழலில்தான் அவர் மீண்டும் களமிறக்கப்பட்டு, தற்போது முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிக்க: விரைவில் அமெரிக்கா.. பிரிவுக்கு முற்றுப்புள்ளி? மீண்டும் படங்களைப் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா மனைவி!