பிரதமர் மோடி pt web
இந்தியா

மோடி பதவியேற்பு விழா: யார் யாருக்கெல்லாம் அழைப்பு தெரியுமா?

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணபதி சுப்ரமணியம்

நாளை மறுநாள் (09.06.2024) ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி அமைச்சரவை பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தொழிலாளர்கள், மத்திய அரசு திட்டங்களில் பலன் பெறுவோர், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

LokSabhaElection BJP

மேலும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. அதேபோல், புதிய நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட "சென்ட்ரல் விஸ்டா" திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்காக குடியரசு தலைவர் இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடி, விழாவை திறந்த வெளியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளார்.