ராகுல் காந்தி pt web
இந்தியா

வயநாடா? ராய் பரேலியா? ராகுல் காந்தி கொடுத்த புது விளக்கம்

வயநாடு, ராய் பரேலி ஆகிய இரு தொகுதிகளில் எதைத் தக்க வைத்துக்கொள்வது என்பதில், தான் எடுக்கப்போகும் முடிவு எதுவாக இருந்தாலும் அது இரு தொகுதி மக்களையும் மகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் இருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

PT WEB

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து ராய் பரேலியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தி அடுத்து வயநாட்டிற்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையில் பேரணியாக வந்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தியை INDIA கூட்டணி தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் எதை தக்க வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும் எனினும் இதில் தான் எடுக்கப்போகும் முடிவு எதுவாக இருந்தாலும் இரு தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் என்றார்.

தற்போதைய தேர்தல், அரசமைப்பு சாசனத்தை காப்பதற்காகவும் ஆணவத்தை கருணையை கொண்டு வீழ்த்துவதற்காகவும் நடந்தது என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.