உத்தராகண்ட் புதிய தலைமுறை
இந்தியா

Uttarakhand Tunnel Rescue | பயனளிக்காத முயற்சிகள்.. தொடங்கியது அடுத்த திட்டம்.. எப்போது நிறைவடையும்?

உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக, செங்குத்தாக துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

PT WEB

உத்தராகண்டில் உத்தர்காசி அருகே சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவால், 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.

அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சுரங்கத்தில் மேலிருந்து தோண்டும் பணி தொடங்கியுள்ளது. தொழிலாளர்களை மீட்க மேலிருந்து 86 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில், இதுவரை 19 மீட்டர் தூரம் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலிருந்து துளையிடும் பணி சுமார் 100 மணி நேரத்திற்கு மேல் நடைபெறும் எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 22 வயதான தொழிலாளி மஞ்சித், தனது தந்தையிடம் வாக்கி டாக்கி மூலம் பேசியுள்ளார்.

அப்போது தன்னுடன் உள்ள அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் யாருக்கும் மருத்துவ அவசர நிலை எதுவும் தேவையில்லை எனவும் அந்த தொழிலாளி தனது தந்தையிடம் தெரிவித்திருப்பது நாட்டு மக்கள் அனைவரையும் நிம்மதியடையச் செய்வதாக உள்ளது.