இந்தியா

விசாகப்பட்டினம் ஆலையிலிருந்து கசிந்த ஸ்டைரீன் வாயு என்பது என்ன?

விசாகப்பட்டினம் ஆலையிலிருந்து கசிந்த ஸ்டைரீன் வாயு என்பது என்ன?

jagadeesh

விசாகப்பட்டினம் ஆலையிலிருந்து கசிந்த ஸ்டைரீன் வாயு எப்படியிருக்கும் அதைச் சுவாசித்தால் என்னென்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படும் என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டைரீன் என்பது மிக எளிதில் ஆவியாகக் கூடிய திரவ நிலையில் சேமிக்கப்படுகிறது. இது வினைல்பென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது ஸ்டைரீன் நிறமற்றதாகவும் சில நேரங்களில் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படும் உணவு வைக்கும் பாத்திரங்கள், பார்சல்கள், மேஜை விரிப்புகள் போன்றவற்றுக்கான பிளாஸ்டிக் தயாரிப்பில் ஸ்டைரீன் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டைரீன் கலந்த காற்றைச் சுவாசித்தால் மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், மூச்சிரைப்பு, இருமல் போன்றவை ஏற்படும்.

அதிக அளவில் ஸ்டைரீன் வாயுவைச் சுவாசித்தால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது ஸ்டைரீன் வாயுவைச் சுவாசிக்கும் சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரித்து அவர்கள் கோமா நிலைக்கும் செல்லக்கூடும். ரத்தப் புற்றுநோய், நிணநீர்ப் புற்றுநோய் போன்றவற்றிற்கு ஸ்டைரீன் வாயு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்