இந்தியா

மத்திய பட்ஜெட்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பென்ன? புத்தொழில் முனைவோர் பேட்டி

மத்திய பட்ஜெட்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பென்ன? புத்தொழில் முனைவோர் பேட்டி

நிவேதா ஜெகராஜா

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதில் மின்சார வாகன புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) செய்யும் நிறுவனத்தின் ஆர் & டி தினேஷ் அர்ஜூன் நம்மிடையே பேசினார். அவர் கூறியவை:

“புத்தொழில் நிறுவனங்கள் மேர்கொண்டு வளர, இன்னும் நிறைய இன்செண்டிவ் தேவைப்படுகிறது. அரசு தரப்பில் எங்களுக்கு ஸ்டார்-அப் ஃபண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், லோன் கிரெடிட் தரப்பட வேண்டும்.  அப்போதுதான் வங்கிகள் எங்களால் கடன்கள் வாங்க முடியும். அப்படி நிதி கிடைத்தால்தான் முன்னோக்கி எங்களால் நடக்கவும் முடியும்.

இன்று வாகன ஓட்டிகள் பலரும் இ-வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். மற்றொரு பக்கம், நாம் இறக்குமதி மட்டும் செய்து வாகனத்தை விற்க முடியாது. நாமே தயாரிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இறக்குமதி செய்கையில் அதில் சிக்கலிருந்தால் சிக்கல் நமக்குதான். ஆகவே இங்கே அவற்றை உருவாக்க, அதற்கான தேவைகளை நாம் உருவாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் கூட இவ்விஷயத்தில் புதிதுபுதிதாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கூடுதல் தேவைகள் இருக்கிறது. அந்த பாதையை அரசு செய்து கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்” என்றார்.