கிரானா கடை எக்ஸ் தளம்
இந்தியா

இந்தியாவில் 2 லட்சம் சிறு கடைகள் மூடல்.. காரணம் என்ன?

டிஜிட்டல் வர்த்தகம் காரணமாக, இந்தியாவில் 2,00,000 பலசரக்குக் (கிரானா) கடைகள் மூடப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விநியோகஸ்தர்கள் சங்கமான அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (AICPDF) இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இந்தியாவில் சுமார் 13 மில்லியன் பலசரக்கு (கிரானா) கடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 10 மில்லியனுக்கும் அதிகமான அடுக்கு-2 கடைகள் சிறிய நகரங்களில் உள்ளன. கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பலசரக்கு கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் பலசரக்கு கடைகளின் விற்பனை தேக்க நிலையிலேயே உள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் சுமார் 13 மில்லியன் கடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் 10 மில்லியனுக்கும் அதிகமான அடுக்கு-2 மற்றும் சிறிய நகரங்களில் உள்ளன. மொத்தத்தில், இந்த நகரங்களில் மட்டும் 90,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுக்கு-1 நகரங்களில் 60,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் கூடுதலாக 50,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. ​​மொத்தத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2,00,000 கிரானா கடைகள் மூடப்பட்டுள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் டிஜிட்டல் வர்த்தகமே. இந்த வர்த்தகம் பலசரக்குக் கடைகளின் வணிகத்தைப் பாதிக்கிறது. சமீபத்திய காலங்களில், பல டிஜிட்டல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மாற்றுவதாலும், விரைவான சேவை அளிப்பதாலும் கிரானா கடைகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. 4 மாதங்களில் ரூ.120 கோடியை இழந்த இந்தியர்கள்.. மத்திய அரசு பகீர் தகவல்!