இந்தியா

ஏர் இந்தியாவின் பரிதாபம் - போனியாகாததற்கு காரணம் என்ன

ஏர் இந்தியாவின் பரிதாபம் - போனியாகாததற்கு காரணம் என்ன

webteam

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் விமான நிறுவனம் ஏர் இந்தியா. அரசே இயக்கும் ஒரே விமான பொதுச்சேவை நிறுவனம். கடந்த சில ஆண்டுகளாக சரியாக இலாபம் இல்லாததால் , போட்டியை சமாளிக்க முடியாததால் பணியாளர்களுக்கே ஊதியம் தர முடியாத நிலைக்கு சென்றது. மத்திய அரசு சிறப்பு நிதியெல்லாம் ஒதுக்கி சரிவில் இருந்து ஏர் இந்தியாவை மீட்டது. ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 

மத்திய அரசின் முயற்சிகள் ஓரளவு பலனளித்தாலும் கூட , ஏர் இந்தியாவை விற்று விட மத்திய அரசு முயற்சி எடுத்தது. சில வெளிநாட்டு நிறுவனங்கள், இண்டிகோ போன்றவை கூட ஏர் இந்தியாவை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசு வெளிப்படையாகவே ஏர் இந்தியாவை வாங்கலாம் என அறிவித்தது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏர் இந்தியாவை மீட்டு , அரசே இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கபப்ட்டது. ஆனால் தொடர் நஷ்டம் காரணமாக மத்திய அரசு முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 

ஏர் இந்தியாவை வாங்க நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் யாருமே அதனை வாங்க முன்வரவில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது..

தொடர் நஷ்டம் 

ஏர் இந்தியாவை எந்த நிறுவனம் வாங்கினாலும் அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு அந்த நிறுவனம் இலாபம் பார்க்க முடியாது. 

கடன் சுமை 

ஏர் இந்தியாவின் மொத்த கடன்சுமை தற்போதைய நிலையிம் 7.5 மில்லியன் டாலராக இருக்கிறது. இது வரும் காலங்களில் அதிகரிக்கலாம்

சந்தை மதிப்பு விகிதம் 

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்பட்டு வரும் நிலையில் ஏர் இந்தியாவின் மவுசு குறைந்துள்ளது. சந்தை மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. 

இழந்த இடம் 

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் என்ற இடத்தில் இருந்த ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா. உலக சந்தையில் போட்டி போடும் திறன் கொண்டதாக இருந்த நிலை தற்போது ஏர் ஏசியா, இண்டிகோவின் பன்னாட்டு சேவை அறிவிப்பால் காலியானது.

புதுப்பிக்கப்படாத சர்வதேச சேவை

பல்வேறு வழித்தடங்களில் பன்னாட்டு சேவை ஏர் இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் நஷ்டம் காரணமாக அவை பெரும்பாலும் கைவிடப்பட்டது. மீண்டும் அவற்றை பெற்று இயக்குதல் தேவையற்ற நஷ்டத்தை உருவாக்கும் 

நெருக்கடி

விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகளையும் கூட ஏர் இந்தியா சமீப காலங்களில் இழந்து விட்டது. குறிப்பாக சரக்கு பரிமாற்ற சேவைகளில் 40 % தனியார் விமான நிறுவங்களிடம் சென்று விட்டது. இதனால் பயணிகள் சேவையிலேயே நஷ்டத்தை ஈடு கட்டும் நிலை உருவாகும். ஆனால் அதற்கு தேவையான கட்டுமானம் ஏர் இந்தியாவிடம் இல்லை

Courtesy : The Economic Times