இந்தியா: மூடப்படும் ஏடிஎம்கள் புதியதலைமுறை
இந்தியா

மூடப்படும் ஏடிஎம்கள்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கு. காரணம் என்ன... தெரிந்துகொள்ளலாம்.

PT WEB

இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கு. காரணம் என்ன... தெரிந்துகொள்ளலாம்.

வங்கிகளுக்குச் சென்று கியூவில் நின்று கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்த காலம் போய், பார்க்கும் இடமெல்லாம் ஏடிஎம்கள். இப்படி இருந்த நம் சாலைகளில் பல ஏடிஎம்கள் மூடப்பட்டிருக்கின்றன.

இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களும் உறுதிபடுத்தியிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் ஏடிஎம்கள் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 2 லட்சத்து 15 ஆயிரமாக குறைந்திருக்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் இன்னமும் பணப்பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. ஒரு லட்சம் பேருக்கு 15 ஏடிஎம்கள் என்ற வகையிலேயே உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பதும் அதன் எண்ணிக்கை குறைய காரணமாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, வங்கித்துறையின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதும் அதற்கேற்றவாறு வங்கிகளிலும் டிஜிட்டல் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் காரணமாகக் கூறப்படுகிறது. எனவேதான், யூபிஐ மூலம் பரிவர்த்தனைகள் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறு நேரடியாகவோ, அல்லது இணையவழியிலோ வங்கிகள் சேவை வழங்கி வருகின்றன. எனவே தான் ஏடிஎம்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய மாதிரியை இந்தியா பின்பற்றுகிறது என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.