மேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் செய்யும் வகையில் அம்மாநில சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரமாக 1911ம் ஆண்டு வரை கொல்கத்தா இருந்தது. பின்னர் புதுடெல்லி தலைநகரமாக மாறியது. கொல்கத்தா என்ற பெயரிலேயே அந்த மாநில அழைக்கப்பட்டது. 2001ம் ஆண்டு புத்ததேப் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி அரசு கொல்கத்தாவை மேற்கு வங்காளம் என பெயர் மாற்றம் செய்தது. தற்போது வரை மேற்குவங்காளம் என்ற பெயரிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காளம் என்ற பெயரை மாற்றுவதற்கான முயற்சியில் மம்தா பனர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு முயற்சி செய்து வருகிறது. மேற்குவங்க மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கான முதல் தீர்மானம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆங்கிலத்தில் 'பெங்கால்', பெங்காலியில் 'பங்களா', இந்தியில் 'பங்கால்' என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன. மூன்று பெயர்கள் வைப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கும் என அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த முயற்சியை மம்தா பானர்ஜி அரசு கையிலெடுத்துள்ளது. பெயர் மாற்றம் தொடர்பான அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மொழிகளிலும் பங்களா என ஒரே பெயரில் அழைக்க முடிவெடிக்கப்பட்டது.
அதன்படி, மேற்குவங்காள சட்டசபையில் பங்களா என பெயர்மாற்றம் செய்ய ஒருமனதுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பதவியேற்றது முதல் பல்வேறு சாலைகளுக்கும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் பெயர்களை மாற்றினார்.