இந்தியா

மகர சங்கராந்தி: கங்கா சாகரில் குவிந்த பக்தர்கள்!

மகர சங்கராந்தி: கங்கா சாகரில் குவிந்த பக்தர்கள்!

webteam

மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பகதர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம். 

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் இப்போது அப்பகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. விடிய விடிய வருகை தந்த பக்தர்கள், இன்று அதிகாலையில் புனித நீராடினர். இந்த ஆண்டு, வழக்கத்தை விட அதிகமானோர் வந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்கள் இங்கு வருகை தந்ததாகவும் இந்த வருடம் இப்போதே 20 லட்சம் பக்தர்களை தாண்டி விட்டதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிரிக்கும் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.