அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்ஸர்லாந்து அதிபர் டோரிஸை, பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் டெல்லியில் வரவேற்றனர்.
சுவிட்ஸர்லாந்து அதிபர் டோரிஸ் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய டோரிஸ், 70 வருடங்களுக்கு பிறகு இந்தியா-சுவிட்ஸர்லாந்துக்கு இடையே மீண்டும் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன் தங்கள் நாட்டின் புதிய முதலீடுகளை, இந்தியாவில் தொடங்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து இடையேயான வர்த்தகம், முதலீடு, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் பண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.