டெல்லியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
அரேபிய கடலில் புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் எதிரொலியாக டெல்லியில் ஆலங்கட்டி மழை, கனமழை மற்றும் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இன்று இரவு நேரத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்றும், நாளை பலத்த காற்றுடன் கூடிய மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
இன்று காற்றின் வேகம் 30 கி.மீட்டர் வரை வீசக்கூடும் எனவும், நாளைய தினம் இது 50 முதல் 60 கி.மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அத்துடன் ஹரியானா மாநிலத்திலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கனமழை பெய்யும் எனும் செய்தி வெளியாகியிருக்கிறது. பொதுவாக வெயில் காலங்களில் வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும், மழை நேரங்களில் வைரஸ் வேகமாக பரவுக்கூடும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.