முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒதிஷா மாநிலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தின் முடிவில் அவர் இவ்வாறு பேசினார். புதிய இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் இந்த முன்னேற்றம் மெதுவானதாக இல்லாமல் விரைவானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மத்திய அரசிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருப்பது தெரியவருவதாக தெரிவித்தார்.