இந்தியா

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இறக்குமதியாகும் இயந்திரங்கள்!!

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இறக்குமதியாகும் இயந்திரங்கள்!!

webteam

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் முதல் வாரங்களில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்

லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவில் பெருகி வருவதால், நாட்டின் விவசாய உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தாமல் இருந்தால், விவசாயப் பொருட்கள் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் முதல்வாரங்களில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, பூச்சிகொல்லிகள் தெளிக்கும் நவீன 60 இயந்திரங்கள், இங்கிலாந்து தயாரிப்பான சிறப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 5 ஹெலிகாப்டர் வாங்க திட்டமிட்டு முன்பதிவு செய்துள்ளோம். ஜூன் முதல் வாரத்தில் இதில் பாதி எண்ணிக்கையிலான இயந்திரங்கள் இந்தியா வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்