இந்தியா

"சீனாவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமையை கண்காணிக்கிறோம்" ஜெய்சங்கர் தகவல்

"சீனாவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமையை கண்காணிக்கிறோம்" ஜெய்சங்கர் தகவல்

jagadeesh

சீனாவில் உள்ள இந்தியர்களின் உடல்நிலையை அங்குள்ள தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலைமை குறித்து தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக வைரஸ் பரவிய ,வுஹான் நகரில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தூதரகம் அந்த மாணவர்களிடம் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பான முறையில் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தூதகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.