இந்தியா

கிராமத்தில் வாட்டர் ஏ.டி.எம். திறந்த இளைஞர்

கிராமத்தில் வாட்டர் ஏ.டி.எம். திறந்த இளைஞர்

webteam

கிரேட்டர் நொய்டா அருகே தலைவிரித்தாடும் குடிநீர்ப்பஞ்சத்தை போக்க வாட்டர் ஏ.டி.எம்-ஐ திறந்துள்ள இளைஞருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை
தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ரன்ஹெரா என்ற அந்த குக்கிராமத்தினர் சாதாரண கார்களையே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி
பெறாமல் இருக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் ஒரு புறம், நீர் சார்ந்த நோய்கள் என இந்த கிராமத்தினர் படாதபாடு படுகின்றனர். எனவே இந்தக் கிராமம் தனக்கென ஒரு புதிய
பாதையை உருவாக்கி வருகிறது. அதை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கிறார் 28 வயதான ராகுல் ஷர்மா. நீரை சுத்திகரித்து விநியோகிக்கும் வகையில், பிரத்யேக நிலையம் ஒன்றை உருவாக்கியுள்ளார் அவர். ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பது போன்ற சிஸ்டம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை அவர் விநியோகம் செய்கிறார். ஆறு ரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீரை பெற முடியும். இதுவே குளிர்ந்த நீர் வேண்டுமானால் 10 ரூபாய் தர வேண்டும். இந்த தண்ணீர் ஏ.டி.எம். வசதியை
அருகில் உள்ள 3 கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார் ராகுல் ஷர்மா. இதன் மூலம் நீரால் பரவும் நோய்கள் கட்டுக்குள் வந்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பும் கிடைப்பதாக கிராமத்தினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.