சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட மத்திய பிரதேச காவல் ஆய்வாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் மனோஜ் யாதவ். இவர் பாலிவூட் நடிகர் அஜய் தேவ்கனின் படங்களை பார்த்து விட்டு அதில் அவர் வருவது போலவே ஒரு காட்சியை செய்ய முயற்சி செய்துள்ளார். அதாவது இரண்டு ஹோண்டா கார்களை மண் சாலையில் ஓட விட்டு, அதில் போலீஸ் உடையுடன் ஏறிக்கொண்டு ஒரு காலை ஒரு காரின் மீதும், மற்றொரு காலை இன்னொரு காரின் மீது வைத்து, பிண்ணனியில் சிங்கம் பாடலை ஓடவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து மனோஜ் வெளியிட்ட வீடியோ சாகர் காவல் ஆய்வாளர் அனில் ஷர்மா கவனத்திற்கு செல்ல, மனோஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனோஜின் தலைமை பொறுப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.