இந்தியா

தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டாரா டேனிஷ் சித்திக்?

தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டாரா டேனிஷ் சித்திக்?

Veeramani

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக்கை, தலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து படுகொலை செய்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கானில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்தி சேகரிப்பின்போது கடந்த 16ஆம் தேதி இறந்தார். அவரது உடல் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கூராய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகள் போர் நடத்தை விதிகளை மீறி, டேனிஷை படுகொலை செய்திருப்பதாக இந்திய அதிகாரிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டேனிஷ் சித்திக்கின் உடலில் 10 தோட்டாக்கள் தாக்கிய காயம் இருந்ததாகவம், முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் இருந்தாக அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை தலிபான் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.