காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விமர்சித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், 'நாலு ஓட்டும் கொஞ்சம் சீட்டும் முக்கியம் அல்ல. மதச்சார்பின்மை தான் பிரதானமானது' என தெரிவித்தார்.
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அதிக இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் குறித்து விமர்சனத்தோடு விளக்கமும் அளித்தார்.
பாரதிய ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி அமைத்தும், தீவிர வர்க்கீய அமைப்பான 'வெல்ஃபேர் பார்ட்டி'யை வெளிப்படையாக ஆதரித்தும் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் களம் கண்டது. வர்க்கியத்தை எதிர்ப்பதும், அதே நேரம் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு சார்ந்த கட்சியுடன் கைகோர்ப்பதையும் தனது நிலைப்பாடாக கொண்டது காங்கிரஸ் கூட்டணி.
இதை இஸ்லாமிய சமூகம் கூட அங்கீகரிக்கவில்லை. அந்த அமைப்புடன் கூட்டணி உண்டு எனவும், இல்லை எனவும் மாறி மாறி சொல்லி மக்களை குழப்பினர். இதனால் வரும் ஆபத்தை காங்கிரஸ் கூட்டணி யோசிக்க வேண்டும். இதனால் என்ன நடந்தது. நாலு ஓட்டும், கொஞ்சம் சீட்டும் அல்ல முக்கியம். மதசார்பின்மைதான் பிரதானம் என்றார்.