இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முகநூல்
இந்தியா

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு | எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவாகின?

மக்களவைத் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 88 தொகுதிகளில் 60.96 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

PT WEB

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர். முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற 102 தொகுதிகளில் 65.5 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு?

  • திரிபுராவில் 79.66 சதவீதமும்,

  • மணிப்பூரில் 78.78 சதவீதமும்,

  • சத்தீஸ்கரில் 75.16 சதவீதமும்,

  • மேற்குவங்கத்தில் 73.78 சதவீதமும்,

  • அசாமில் 77.35 சதவீதமும்,

  • ஜம்மு காஷ்மீரில் 72.32 சதவீதமும்,

  • கேரளாவில் 70.21 சதவீதமும்,

  • கர்நாடகத்தில் 68.47 சதவீதமும்,

  • ராஜஸ்தானில் 64.07 சதவீதமும்,

  • மத்திய பிரதேசத்தில் 58.26 சதவீதமும்,

  • மகாராஷ்டிராவில் 59.63 சதவீதமும்,

  • பீகாரில் 57.81 சதவீதமும்,

  • உத்தரப்பிரதேசத்தில் 54.85 சதவீதமும்

வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்குரிமை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அந்த மாநிலத்தின் பெதுல் தொகுதிக்கு நடைபெறவிருந்த வாக்குப்பதிவு, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி- யின் இறப்பை அடுத்து, வரும் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.