இந்தியா

மீரட் கங்கை நதியில் நீந்தும் டால்பின்கள் - வைரல் வீடியோ

மீரட் கங்கை நதியில் நீந்தும் டால்பின்கள் - வைரல் வீடியோ

webteam

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே கங்கை நதியில் டால்பின்கள் நீந்தி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கங்கை நதி டால்பின் என்பது ஒரு நன்னீர் டால்பின் ஆகும். இது முதன்மையாக கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளிலும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகளில் உள்ள துணை நதிகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை டால்பின் என்பது ஒரு அழிந்துவரும் நீர்வாழ் விலங்கு. இந்நிலையில், இந்த கங்கை நதியில் டால்பின்கள் நீந்தி செல்லும் வீடியோவை கண்ட சமூக வனவிலங்கு ஆர்வலர்கள் மிகவும் வைரலாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கங்கை நதி டால்பின்களின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி ஆகாஷ் தீப் பதவன் பகிர்ந்துள்ளார். அதில், மீரட் அருகே கங்கை ஆற்றில் டால்பின்களைக் கண்டுபிடிப்பது அதிர்ஷ்டம் எனக்கூறியுள்ளார். மேலும், “கங்கை நதி டால்பின் நமது தேசிய நீர்வாழ் விலங்கு. ஒரு காலத்தில் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா நதி அமைப்பில் வாழ்ந்தது. தற்போது அது ஆபத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.