ஹோட்டல் கண்ணாடி அலமாறியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பூனை twitter
இந்தியா

கேரளா: ஹோட்டலில் ஜாலியாக சாப்பிட்டுச் சென்ற பூனை... வைரல் வீடியோவால் ஹோட்டலுக்கு சீல்!

கேரளாவில் ஒரு ஹோட்டலில் கண்ணாடி அலமாரிக்குள் நுழைந்த பூனையொன்று, அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாதாரணமாக நடந்தவாறு சாப்பிட்டுள்ளது. இந்தக் காட்சி வைரலானதை அடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

Jayashree A

உணவு சுகாதாரம் என்பது அறுவடை செய்வது முதல் உணவாக நமது தட்டிற்கு வரும் வரையில் உள்ள சங்கிலித்தொடர். இதில் ஒவ்வொரு புள்ளியும் மிகவும் அவசியமான ஒன்று. அதாவது, காலாவதியான அல்லது அழுகிபோன பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் பொழுது அந்த உணவானது எப்படி உடலுக்கு ஒவ்வாததாக மாறி உடல் உபாதைகளை ஏற்படுத்துமோ அதே போல், விலங்குகளின் எச்சல் பட்ட உணவுகளும் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். சிலர் இதை அலட்சியம் செய்வது வருந்ததக்க செயலாகும்.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெல்லநாடு என்ற இடத்தில் செயல்பட்டு வந்த ஒரு ஹோட்டலில், முகப்பில் கண்ணாடி அலமாரி வைக்கப்பட்டுள்ளது. அதில் சில உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒரு பூனை சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது. ஹோட்டலின் வழியாக சென்ற இருவர் அதை தங்கள் கைப்பேசியில் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஹோட்டல் கண்ணாடி அலமாறியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பூனை

அந்த வீடியோவானது வைரலானதை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாராரத்துறையினர் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

முறைப்படி உரிமம் பெறாமலும் ஹோட்டலை சுத்தம் செய்யாமலும் இருந்ததைக்கண்டு ஹோட்டலை மூடும்படி உத்தரவிட்டனர்.