நைட் கிளப்புக்கு வந்த நண்பர்களை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருக்ரம் மாவட்டத்தில் உள்ள நைட் க்ளப் ஒன்றுக்கு நண்பர்களாக சேர்ந்து ஒரு டீம் சென்றுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த இளம்பெண் ஒருவரை அந்த க்ளப்பில் வேலை செய்து வரும் பவுன்சர்களில் ஒருவர் தவறாக தொட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்கள் பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது நைட் க்ளப் மேலாளர் நண்பர்களாக வந்தவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பவுன்சர்கள் அந்த நண்பர்கள் குழுவை குண்டுக்கட்டாக இழுத்துச் செல்வதும், அவர்களை அடிப்பதுமாக வீடியோ வெளியாகியுள்ளது.
இதையடுத்து காவல் துறையினர் கிளப் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐடி ஊழியர் ஒருவர் அளித்துள்ள இப்புகாரில் தங்களிடமிருந்து வாட்ச் மற்றும் ரூ.10,000 பணத்தையும் பவுன்சர்கள் பறித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை பணி நீக்கம் செய்துள்ள க்ளப் நிர்வாகம், பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதையும் படிக்க: குவாண்டம் இயக்கத்தை கண்டுபிடித்தது பிரேக்கிங் பேட் வால்டரா? - பஞ்சாப் பள்ளியால் சர்ச்சை!