வினேஷ் போகட் pt web
இந்தியா

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வினேஷ் போகட் போட்டி

PT WEB

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

VineshPhogat Julana

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டியிடுகிறார். 31 வேட்பாளர்களைக் கொண்ட ஹரியானா மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

காரி சம்பாலா தொகுதியில் முன்னாள் முதல்வர் புபேந்தர்சிங் ஹூடாவும், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய்பான் ஹூடால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 31 பேர் கொண்ட முதல் பட்டியலில் 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், வினேஷ் போகட் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பஜ்ரங் புனியாவிற்கு விவசாயப் பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜக தனித்து போட்டியிட ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.