பூபிந்தர் சிங் ஹுடா -வினேஷ் போகட்  முகநூல்
இந்தியா

ஹரியானா|வினேஷ் போகட் பின்னடைவு! ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக; தலைகீழாக சரிந்த காங். வெற்றிவாய்ப்பு

ஹிரியானாவின் ஜுலானா தொகுதியில் முன்னிலை வகித்த வினேஷ் போகட் , மற்றும் கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் முன்னிலை வகித்த காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹுடா என இருவரும் தற்போது பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானா சட்டப்பேரவைக்கு 90 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், போட்டி நிலவிவருகிறது. இந்தவகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹுடா என இருவரும் முன்னிலை வகித்துவந்தனர்.

ஆனால், காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 36, மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், ஹிரியானாவின் ஜுலானா தொகுதியில் முன்னிலை வகித்த வினேஷ் போகட் , மற்றும் கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் முன்னிலை வகித்த காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹுடா என இருவரும் தற்போது பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் கூறுவதென்ன?

மாறி மாறி வரும் முன்னிலை நிலவரங்களை பொறுத்தவரை ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பிரதான வாக்குகள் என்பது, ஜாட் சமூக வாக்குகள், தலித் சமூக வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள் என்றும்,

ஆனால், பாஜகவை பொறுத்தவரை ஜாட் சமூக வாக்குகளை தவிர பிற சமூக வாக்குகளை கவரும் வண்ணம் பாஜக தங்களின் முன்னெடுப்புகளை எடுத்திருப்பதாகவும் பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றன.. காரணம்.. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தது ஜாட் சமூக மக்கள்தான் என்பது குறிப்ப்பிடத்தக்கது. பாஜக தனது சமூக ரீதியான கணக்குகளில் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களுடன் முன்னிலையில் இருப்பதால் அந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது.