உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனுக்கு, 4 அறை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பளித்தது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து, உறவுக்கார சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு ரூ .1 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தீர்ப்பதற்கு அந்த இளைஞரை நான்கு முறை அறைய வேண்டும் என்றும் பஞ்சாயத்து கூறியது.
16 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் தனது 8 வயது உறவினர் சிறுவனை பிஜ்னோரின் நெத்தூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் போலீஸில் புகார் அளிக்காததால் உள்ளூர் பஞ்சாயத்து மூலமாக இந்த வழக்கு தீர்த்துக்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த 8 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை, வயலுக்குள் இழுத்துசென்ற அந்த இளைஞன், அவனை பாலியல் வன்கொடுமை செய்தான், வழிப்போக்கர்களில் சிலர் சிறுவனின் அழுகையைக் கேட்டு மீட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுபற்றி பேசிய நெஹ்தூர் காவல்துறை அதிகாரி ஜெய்குமார், "இந்த விஷயம் ஒரே குடும்பத்தினருக்குரியது. நாங்கள் கிராமத்திற்குச் சென்றிருந்தோம், ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். பஞ்சாயத்து மற்றும் அதன் முடிவு பற்றி எங்களுக்குத் தெரியாது. இது சட்டப்பூர்வமானது அல்ல" என்றார். இந்த வழக்கு தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உறுதியளித்தார்.