இந்தியா

விகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்

விகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்

webteam

விகாஷ் துபே என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து, ட்விட்டரில் பலரும் தங்களது கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார். நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்தச் சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே, உத்தரப்பிரதேச சிறப்புப் ‌படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது மழை பெய்ததால், விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தப்ப முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அவைகள பின்வருமாறு:

1.விகாஷ் துபே போன்ற ஒரு குற்றவாளியை காரில் கொண்டு செல்வதற்குத் தேவையான SOP பின்பற்றப்பட்டதா?

2.வாகனம் கவிழ்ந்தால் அவர் மட்டுமா தப்பிக்க முற்படுவார்?

3.காவலர்கள் அவரை இடுப்புக்கு கீழே சுட்டதாகத் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனை உண்மையை உடைக்குமா?

4.விகாஷ் போன்ற ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்களுடன் முன்னால் ஒரு  வாகனம், மற்றும் பின்புறத்தில் ஆயதமேந்திய காவல் அதிகாரிகள் கொண்ட வாகனங்கள் சென்றதா?

5.விகாஷ் சென்ற வாகனம் சவாரி என்று சொல்லப்படுகிறது. ஆனால் கவிழ்ந்த வாகனமோ மகேந்திரா TUV. அப்படி இருக்கும்போது விகாஷ் எப்படி தப்பித்து இருப்பார்?

6. அவரது கைகள் கைவிலங்கால் பூட்டப்பட்டிருக்கும் போது, அவர் எப்படி வாகனத்தின் கண்ணாடியை உடைக்க முடியும்,  துப்பாக்கியைப் பறிக்க முடியும்?