இந்தியா

வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு

வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு

webteam

வீடியோகான் குழுமத்திற்கு முறைகேடாக 3,250 கோடி ரூபாய் கடன் அளித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும், செபியும் விசாரணையை தொடங்கியுள்ளன.

2012ம் ஆண்டு வீடியோகான் குழுமத்திற்கு ஐசிஐசிஐ வங்கி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியது. 440 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்ட நிலையில், 2,810 கோடி ரூபாய் மீதமிருக்கிற நிலையில் அதனை வாரக் கடனாக கடந்தாண்டு ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. இந்த நடைமுறையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் மற்றும் சந்த கோச்சரின் கணவர் தீபக் கோச்சரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். சில நாட்களிலேயே அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய தூத், அதன் பங்குகளை குறைந்த விலைக்கு தீபக் கோச்சருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கைமாறகவே வீடியோகான் குழுமத்திற்கு கடன் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து சிபிஐயும், செபியும் விசாரணையை தொடங்கியுள்ளன.