இந்தியா

11 மணிநேரம் வேலை செய்தும் உணவு இல்லை.. பாதுகாப்பு படை வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு

11 மணிநேரம் வேலை செய்தும் உணவு இல்லை.. பாதுகாப்பு படை வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு

Rasus

எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமான உணவு கூட வழங்கப்படுவதில்லை என்று வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்துறை செயலகம் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் சீமா சுரக்ஷா பால் பிரிவில் 29-வது பட்டாலியனில் பணிபுரியும் தேஜ் பகதூர் என்ற வீரர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெயிலோ, மழையோ, பனிப்பொழிவோ எந்த காலநிலையாக இருந்தாலும் நாளொன்றுக்கு தொடர்ந்து 11 மணி நேரம் எல்லையில் பணிபுரியும் தங்களை உயர் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடத்துவதாக அந்த வீடியோவில் தேஜ் பகதூர் குறிப்பிட்டுள்ளார். தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், பல நாட்களில் இரவு உணவு தரப்படாததால் பசியுடன் தூங்கச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு போதுமான நிதி ஒதுக்கினாலும் கூட, உயர் அதிகாரிகள் ஊழல் செய்துவிடுவதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தேஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து உள்துறை செயலகம் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த ம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.