இந்தியா

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

Rasus

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

நாளை காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்தல், மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், வெங்கய்ய நாயுடு போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியடிகள் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி களத்தில் உள்ளார். அனைத்து மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள். மாலை 7 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் இம்மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.