இந்தியா

குடியரசுத் துணை தலைவருக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

குடியரசுத் துணை தலைவருக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

webteam

புதிய குடியரசுத் துணை தலைவருக்கான தேர்தல் காலை 10மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் எம்.எல்.க்கள் வாக்களித்து வருகின்றனர். 

நாட்டின், குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவராக உள்ள, ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும், 10ம் தேதி நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, புதிய குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு துவங்கி  மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 790 எம்.பி.,க்கள் தங்களது வாக்கினை பதிவு செய்கின்றனர். முடிவு இன்று இரவிலேயே அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க, சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.