இந்தியா

பெகாசஸ் உளவு விவாகரம்: அமளியில் ஈடுபட்டதாக 6 திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்

PT WEB

பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வெங்கையா நாயுடு எச்சரிக்கையை மீறி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியவாறு, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு 12-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பேசிய வெங்கையா நாயுடு, அவையை முடக்கம் செய்யும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், அந்த செயலில் ஈடுபடும் உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எச்சரித்திருந்தார். 

இதன்பிறகும் பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.