அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டது தான்தான் என முன்னாள் எம்பி, ராம்விலாஸ் வேதாந்தி
தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மசூதி அருகிலிருந்து அதை இடிக்க அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஜயராஜே சிந்தியாஆகியோர் உத்தரவிட்டதாக வெளியான தகவல் தவறு என்றும் வேதாந்தி தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அந்த தருணத்தில் மைக்கை தன்னிடம் இருந்து பறித்து கர சேவகர்களை அமைதியாகக் கலைந்து செல்லுமாறுஅத்வானி உள்ளிட்டோர், தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் வேதாந்தி தெரிவித்துள்ளார். மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிஉள்ளிட்டோரை மீண்டும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.