model image freepik
இந்தியா

’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

இன்றைய உலகில் திருமணத்தை மீறிய உறவுகளால் குடும்பங்கள் சிக்கிச் சிதைவுடன், உயிர்களும் பலியாக்கப்படுகின்றன என்பதுதான் நாம் அன்றாடம் படிக்கப்படும் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

model image

உத்தரப்பிரதேச ஆக்ராவின் பாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மத்தியப் பிரதேசம் பிண்டிலைச் சேர்ந்த பெண்ணை, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திருமணம் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் மோதல் தொடர்ந்துள்ளது. இதனால், கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தப் பெண், பெற்றோர் வீட்டிற்குச் சென்றதுடன், அங்கிருந்தபடியே விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இதையும் படிக்க: ’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

அதேநேரத்தில், கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி, மீண்டும் வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கணவருக்கு, விவாகரத்து விவகாரம் மேலும் ஆத்திரத்தை ஊட்டியுள்ளது. ஆயினும், நேரில் சென்று மனைவியிடம் சமரசம் பேசி அவரை அழைத்து வரலாம் என்று எண்ணி மாமியார் ஊருக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால் அங்கே சென்றபிறகுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவருடைய மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணவர் கேட்க, மனைவியின் உறவினர்கள் அவரைத் தாக்க முன்வந்துள்ளனர். அதிலிருந்து தப்பித்துவந்த அவர், போலீஸ் நிலையத்தில் போய்ப் புகார் அளித்துள்ளார்.

model image

கல்யாணத்துக்கு முன்பிருந்தே, பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால்தான், தன்னிடம் மனைவி சரியாக வாழாமல், வேண்டுமென்றே தகராறு செய்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அறிந்த மனைவி, உடனே தன்னுடைய வாட்ஸ்அப்பில், வினோதமான ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். ’என்னுடைய கணவரை கொல்பவருக்கு, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்" என அவர் ஸ்டேட்டஸ் வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன அந்தக் கணவர் மீண்டும் போலீஸிடம் சென்று, மனைவி வைத்திருந்த ஸ்டேட்டஸை எடுத்துக் காண்பித்துள்ளார். இதனால், பயந்துபோன போலீஸே, உடனே மனைவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

இதையும் படிக்க: ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!