இந்தியா

ஆம்புலன்ஸ் இல்லை: ரிக்சாவில் உடலை கொண்டு சென்ற அவலம்!

ஆம்புலன்ஸ் இல்லை: ரிக்சாவில் உடலை கொண்டு சென்ற அவலம்!

webteam

உத்தரபிரதேச மாநிலம் அருகே இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகங்கள் ஆம்புலன்ஸ் தர முன்வராததால், அவரது உடலை ரிக்சாவில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல சில மருத்துவமனை நிர்வாகங்கள் ஆம்புலன்ஸ் தர மறுப்பதால், அவர்களின் உடல்களை தோளிலும், சைக்கிள்களிலும் தூக்கி செல்லும் அவல நிலை அரங்கேறி வருகிறது. 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இறந்த நிலையில் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும்படி தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், சில மருத்துவமனைகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர் ஒருவரின் ஆட்டோ ரிக்சாவில்  உடல் பிரதேச பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதியில் காவல் அதிகாரிகள், வி.ஐ.பிக்களின் வீடுகள் இருந்தும் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என ரயில்வே போலீசார் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.