உத்தரப்பிரதேச அரசுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், ’முறையான மருத்துவ வசதியின்றி மக்கள் தவித்துவரும் சூழலில், பசு மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையை உத்தரப்பிரதேச அரசு தொடங்கியிருக்கிறது. பசு மாடுகளுக்கென சொகுசு படுக்கை அறைகள், பேறுகால விடுப்பு, குளுகுளு பேருந்து வசதி, உல்லாசப் பயணம் போன்றவற்றையும் உத்தரப்பிரதேச அரசு செய்துகொடுக்கும் என நினைக்கிறேன்’ என அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.