இந்தியா

பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி உத்தராகண்ட் முதல்வர் கருத்து - ட்விட்டரில் குவிந்த எதிர்வினை

பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி உத்தராகண்ட் முதல்வர் கருத்து - ட்விட்டரில் குவிந்த எதிர்வினை

EllusamyKarthik

பெண்கள் ஜீன்ஸ் அணிவது  ‘மோசமான முன்மாதிரி அது' என்று உத்தராகண்ட்  மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார். இந்நிலையில் அவரது கருத்திற்கு பெண்கள் பலரும் ட்விட்டரில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். 

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் ஜா ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். “பழங்கால பழக்கவழக்கங்களை பின்பற்றி ஜீன்ஸ் அணியும் கலாச்சாரத்தை விமர்சிக்கும் இந்த முதல்வரை நாம் புறக்கணிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

நடிகை Gul Panag ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள செல்பி படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

ராஜ்ய சபா உறுப்பினரும், சிவ சேனா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பிரியங்கா சதுர்வேதி “உட்கார்ந்த இடத்தில் தங்கள் மனம் போன போக்கில் பெண்களை விமர்சிக்கும் ஆண்களால் தான் நாட்டின் சம்பிரதாயங்கள் பாதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

முன்னாள் பெமினா மிஸ் இந்தியாவான சிம்ரன் கவுர் முண்டியும் ஜீன்ஸ் அணிந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

#RippedJeans என்ற ஹாஷ்டேகில் சுமார் 16000 ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.