இந்தியா

ஊரடங்கில் பள்ளி விடுதியில் தங்கிய மாணவன் : பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விடுதி காப்பாளர்

ஊரடங்கில் பள்ளி விடுதியில் தங்கிய மாணவன் : பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விடுதி காப்பாளர்

webteam

உத்தரகாண்டில் 9 வயது பள்ளி மாணவனை விடுதி காப்பாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளார்

உத்தரகாண்டின் தேராதூன் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென
அறிவிக்கப்பட்ட ஊடரங்கினால் அங்குத் தங்கியிருந்த மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த 9
வயது மாணவர் ஒருவர் மட்டும் விடுதியிலேயே தங்கியுள்ளார். ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதை அடுத்து அவரது பெற்றோரால் வர
முடியவில்லை. இதனால் அந்த சிறுவன், விடுதியிலேயே தங்கியுள்ளான்.

இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுள் வழங்கப்பட்ட பின் விடுதியில் உள்ள மகனை அழைத்துச்செல்லப் பெற்றோர் வந்துள்ளனர். அப்போது விடுதி
காப்பாளர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.பாலியல் துன்புறுத்தல் ஆளாக்கப்பட்டதாகவும், விடுதி காப்பாளரின்
அறையைச் சுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவன் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து
காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் தனியாகச் சிக்கிக்கொண்ட சிறுவனை 
விடுதி காப்பாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.