இந்தியா

மலைப்பகுதியில் காயமடைந்த பெண் - 45 கி.மீ தோளில் சுமந்து சென்று மீட்ட ஐ.டி.பி.பி வீரர்கள்

மலைப்பகுதியில் காயமடைந்த பெண் - 45 கி.மீ தோளில் சுமந்து சென்று மீட்ட ஐ.டி.பி.பி வீரர்கள்

Sinekadhara

சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள லாப்சா கிராமத்தில் வசிக்கும் 26 வயது பெண் ரேகா தேவி. இவர் மலைப்பாதையில் விழுந்ததால் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்று வெள்ளிக்கிழமை காலை இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி அந்தப் பெண் மலைப்பாதையில் இருந்து விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் மீட்பு ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அவருக்கு இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்க முடியவில்லை.

15 மணி நேரம் நடத்திய மீட்பு நடவடிக்கையில், ஐ.டி.பி.பி பணியாளர்களின் 16 பேர் கொண்ட குழு 45 கி.மீ.க்கு மேல் நடந்து சென்றது. அதன்பிறகு, லிலாம் படையின் 14வது பட்டாலியனில் இருந்து மொத்தம் 10 பணியாளர்கள், அந்தப் பெண் தங்கியிருக்கும் கிராமத்தை அடைந்தனர்.

ரேகாவின் நிலை மோசமாக இருப்பதைப் பார்த்த ஐ.டி.பி.பி, குழு அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிக்கொண்டுவந்தனர்.
பின்னர் மேலும் 6 பணியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து, வழுக்கும் அந்த சரிவான நிலப்பரப்பை கடந்துவர உதவினார்கள்.

ஐ.டி.பி.பி பணியாளர்கள் 45 கி.மீ தூரத்தில் இருக்கும் அந்த பெண்ணை 15 மணி நேரத்திற்கும் மேலாக மலையேறி, ஸ்ட்ரெச்சரில் தூக்கிவந்து முன்சியாரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று ஐ.டி.பி.பியின் ஐ.ஜி நிலாப் கிஷோர் கூறியுள்ளார்.