இந்தியா

`காலை 6-இரவு 7’-க்கு மேல் பெண் ஊழியர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது : உபி அரசு

நிவேதா ஜெகராஜா

உத்தரப்பிரதேசத்தில் பெண் தொழிலாளர்களை காலை 6 மணிக்கு முன்னால், இரவு 7 மணிக்கு பிறகு பணியாற்ற வற்புறுத்தக் கூடாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘காலை 6 முதல் இரவு 7 மணி - இந்த நேரத்தை கடந்து பெண் ஊழியர் பணியாற்ற வேண்டுமென்றால், குறிப்பிட்ட அந்த பெண், ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட கடிதம் அவசியம். இப்படி நேரம் கடந்து பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில், பெண்களுக்கு கழிவறை வசதி, உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி ஆகியவை முறையாக இருக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலை தடுக்க நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.