அறுவைச்சிகிச்சை எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி.|திருமணம் செய்வதற்காக ஒரேநாளில் நண்பனை பெண்ணாக மாற்றி அறுவைச்சிகிச்சை; காதலால் வந்த விபரீத ஆசை!

Prakash J

உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் சஞ்சக் கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாஹித் (20). இவருடைய நண்பர் ஓம்பிரகாஷ். இவர், தன்னுடைய பழகிய முஜாஹித்தை, கட்டாயப்படுத்தி பாலின மாற்று அறுவைச்சிகிச்சை செய்துள்ளார். பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பணியாளர்கள் அந்த இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

உடலில் பிரச்னை இருப்பதாகக் கூறி, அதற்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி ஓம்பிரகாஷ் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் , பின்னர் மருத்துவனையில் மயக்க மருந்து கொடுத்து, பாலின மாற்று அறுவைச்சிகிச்சை செய்ததாகவும், அவர் தன்னை அழைத்துச் சென்ற நிலையில், மறுநாள் காலை மருத்துவர்கள் மூலம் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டதாகவும் முஜாஹித் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: T20 WC|தொடர் தோல்வி.. வெளியேறிய பாகிஸ்தான்.. PCB விசாரணையில் வெளியான புது தகவல்!

பின்னர், தனக்கு நினைவு திரும்பியபோது, பெண்ணாக மாற்றப்பட்டிருந்ததாகவும் கூறிய அவர், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அதனை செய்ய மறுத்தால் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்றும், தவிர, இனிமேல் உன்னை குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், உன் சொத்துகளை அபகரித்துக்கொள்வேன் என்றும் ஓம்பிரகாஷ் மிரட்டியதாக முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முஜாஹித், ” ‘நான் உன்னை ஒரு பெண்ணாக மாற்றியுள்ளேன், இப்போது நீ என்னுடன் வாழ வேண்டும். உனக்காக ஒரு வழக்கறிஞர் மற்றும் திருமணத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். உன் தந்தையை கொன்றவுடன் சொத்து உன் பெயருக்கு மாறிவிடும், பின்னர் அதை விற்று லக்னோவுக்குச் செல்வோம்' ”என்று ஓம்பிரகாஷ் கூறியதாக முஜாஹித் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சைவ உணவில் எலும்பு.. பிரியாணியில் புழு.. ஸ்விக்கி மீது அடுத்தடுத்து குற்றஞ்சாட்டிய பயனர்கள்.. #Photo

இச்சம்பவத்தை எதிர்த்து, ஓம்பிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாய சங்கத் தலைவர் ஷியாம் பால் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, ”குடும்பத்தினர் மற்றும் போராட்டக்காரர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக விசாரிக்கப்படும், மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல் துறையினர் உறுதியளித்தனர். முஜாஹித்தின் தந்தை ஜூன் 16 அன்று காவல்துறையில் புகார் அளித்த நிலையில், ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

”இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட முஜாஹித்துக்கு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்தச் சம்பவம் மருத்துவமனையில் உடல் உறுப்புக் கடத்தலின் பெரிய பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது எனவும், அனுமதியின்றி உடலின் முக்கிய உறுப்புகளை அகற்றி மோசடி செய்யும் கும்பல் மருத்துவமனைக்குள் செயல்படுகிறது” எனவும் ஷியாம் பால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: கனடா| பகுதி நேர வேலைக்காக காஃபி ஷாப் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!