மின்சார நாற்காலி முகநூல்
இந்தியா

மின்சார நாற்காலியில் வைத்து பள்ளி மாணவர்கள் துன்புறுத்தப்பட்டார்களா ? விசாரணையில் வெளிவந்ததென்ன?

மின்சார நாற்காலியை வைத்து மாணவர்களை தண்டிப்பதாக எழுந்த புகாரின் பேரிலும், அனுமதி பெறாமல் வகுப்புகள் நடத்துவதற்கான குற்றத்திற்கு விளக்கம் கேட்டும் , சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு உ.பி மாநில கல்வித்துறை ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மின்சார நாற்காலியை வைத்து மாணவர்களை தண்டிப்பதாக எழுந்த புகாரின் பேரிலும், அனுமதி பெறாமல் வகுப்புகள் நடத்துவதற்கான குற்றத்திற்கு விளக்கம் கேட்டும் , சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு உ.பி மாநில கல்வித்துறை ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் , மாணவர்களை ‘மின்சார நாற்காலியில் உட்கார வைத்து தண்டிப்ப' தாக அம்மாநில கல்வித்துறையை நோக்கி குற்றச்சாட்டுக் கடிதம் ஒன்று சென்றுள்ளது.

இந்நிலையில், அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், மின்சார நாற்காலி போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், அதேசமயம் மாணவர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Basic Education Officer ராகேஷ் குமார் சிங்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் பெற்றோர் ஒருவர் புகார் அளித்திருப்பதாக Basic Education Officer ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். அதில் , “ குழந்தையின் பெற்றோர் அளித்துள்ள புகாரில், குழந்தைகளுக்கு தண்டனையின் ஒரு பகுதியாக, அவர்களை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து பள்ளி நிர்வாகம் அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் சிசிடிவியை நாங்கள் சோதனை செய்தோம். அதில், சம்பந்தப்பட்ட சிறுவன் உட்கார்ந்து இருக்கிறானே தவிர, இவர் கூறியதுபோல அச்சிறுவனுக்கு எதுவும் நடக்கவில்லை.

ஆனால், அதே சிசிடிவி பதிவில், இந்த சிறுவனுக்கு எதிராக நான்காம் வகுப்பு படிக்கும் மற்றொரு சிறுவன் அமரவைக்கப்படுகிறார். அச்சிறுவனை அப்பள்ளியில் ஒருங்கிணைப்பாளரான தீப்தி என்பவர் அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

அதுமட்டுமல்ல, அப்பள்ளியில் 1-8 வகுப்புகள் நடத்துவதற்காக அனுமதியும் இல்லை. ஏற்கெனவே இருந்த அனுமதி, கடந்த 2021 ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. எனவே, இந்த காரணங்களுக்காக அப்பள்ளியின் நிர்வாகத்திற்கு தற்போது ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்..

மேலும், இது குறித்து தெரிவித்த அதிகாரி, இப்பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த மின்சார நாற்காலியும் கிடைக்கவில்லை என்றும், அதேசமயம், இது போன்ற காரணங்களை காட்டி குழந்தைகளை அச்சுறுத்துவது குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.