அசாம் மாநிலத்தின் சோனிட்பூர் பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மற்றும் அக்குழந்தையின் தாயையும் காப்பாற்றியுள்ளார்.
அசாம் மாநிலம் சோனிட்பூர் சேர்ந்தவன் சிறுவன் உத்தம் டாட்டி. இவருக்கு 11 வயதாகிறது. இவர் அந்த மாநிலத்திலுள்ள சிறிய ஆற்றைக் கடக்கும் போது அடித்து செல்லப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் லக்கியா ஜோதி தாஸ், “ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் இங்குள்ள சிறிய ஆற்றைக் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த ஆற்றில் திடீரென்று தண்ணீரின் அளவு அதிகரித்தது. எனவே அப்பெண் தனது குழந்தையுடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனையடுத்து தண்ணீரில் குதித்த சிறுவன் உத்தம் டாட்டி பெண் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் காப்பாற்றினார். இந்தச் சிறுவனின் வீரச் செயலை தேசிய அளவில் அங்கீகரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறுவனின் துணிச்சலான இந்தச் செயல் அங்குள்ள மக்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆற்றியுள்ளது. அத்துடன் இந்தச் சிறுவனின் செயலுக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.