கொரோனா கடுமையாக பாதித்திருக்கும் இந்தியாவுக்கு 1.25 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்துகளை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளனர் அமெரிக்க மக்கள்.
இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறார்கள். இன்று ரெம்டெசிவிர் என்ற கொரோனா சிகிச்சைக்கான முக்கிய மருந்தின் 1,25,000 குப்பிகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தன . இதுவரை 4 விமானங்களில் நிவாரணப்பொருட்கள் வந்துள்ளன, மேலும் பல உயிர் காக்கும் பொருட்களும் வந்துகொண்டுள்ளன” எனத் தெரிவித்தார்