இந்தியா

சென்டினல் தீவுக்கு சாகச பயணம்: அமெரிக்க இளைஞர் பற்றி புதிய தகவல்!

சென்டினல் தீவுக்கு சாகச பயணம்: அமெரிக்க இளைஞர் பற்றி புதிய தகவல்!

webteam

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜான் ஆலன் ஜாவ். வயது 27. இவர் கடந்த மாதம் அந்தமானுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர், பழங்குடியினர் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல ஆசைப்பட்டார். இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல மாட்டார்கள். பிற மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாத அந்த பழங்குடியினர், வெளியாட்களை கண்டால் அம்புகளால் தாக்கத் தொடங்குவது வழக்கம்.

இந்நிலையில் ஜான் ஆலனை, அங்குள்ள 7 மீனவர்கள் அந்த தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற அவர் அங்கு சென்றதாக கூறப்பட்டது. ஜான் ஆலனைக் கண்டதும் அங்குள்ள பழங்குடியினர் இது தொடர்பாக அவரை அந்த தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர், ‘ஜான் ஆலன், ஏற்கனவே நான்கைந்து முறை இந்த தீவுக்கு மீனவர்கள் உதவியுடன் சென்றுள்ளார். இப்போது சென்றபோது அந்த பழங்குடியினர் அவரது கழுத்தை கயிறால் இறுக்கிக் கொன்றுள்ளனர். இதைக் கண்ட மீனவர்கள் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி திரும்பி வந்துவிட்டனர்’ என்றார். 

இந்நிலையில் அந்தமானின் போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேசிய, பழங்குடியின தேசிய ஆணைய தலைவர் நந்தகுமார் சாய், ‘முதற்கட்ட விசாரணையில் ஜான் ஆலன் சாவ், திட்டமிட்ட சாகசப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் கூறும்போது, ’வெளிநாட்டினர் இங்குள்ள தீவுகளில் உள்ள பழங்குடியினர் மீது எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த காலங்களில் அவர்களைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளனர். பழங்குடியினரைக் காக்க வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்விடங்களில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது.

சுற்றுலாப் பயணிகள் தீவுகளுக்குள் செல்ல வனத்துறையிடம் இருந்தும், அந்தமான் நிர்வாகத்திடம் இருந்தும் அனுமதி பெறவேண்டும். சென் டினல் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது பழங்குடியின ஆணை யம் நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.