ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர், காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றிவரும் நிலையில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முன், அமெரிக்காவிடம் இந்தியா ஆலோசித்ததாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.