இந்தியா

நடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு

நடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு

webteam

மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி யது. இந்தியா முழுவதும் பாஜக அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோன்கர் குறைவான வாக்குகள் பெற்றுள் ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ரெட்டி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் மாதம்தான் காங்கிரஸ் கட்சியில்தான் சேர்ந்தார். சேர்ந்ததுமே, அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. 

இவர், தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ படங்களில் நடித்தவர். ராம் கோபால் இயக்கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராள மான ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.