இந்தியா

வாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்

வாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்

webteam

யுபிஎஸ்சி தேர்வில் தனது வீட்டை விற்று படித்த பிரதீப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஒருவர் தனது வறுமையையும் பொருட்படுத்தாமல் சாதித்து வெற்றி பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவரது தந்தை மனோஜ் சிங் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துவருகிறார். 

மனோஜ் சிங் தனது மகனின் ஐஏஎஸ் கனவிற்காக தன்னிடம் இருந்த சிறிய வீட்டை வீற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது மகனின் படிப்பு செலவிற்கு அளித்தார். இதனைக் கொண்டு தீவிரமாக டெல்லியில் தங்கிப் படித்தார் பிரதீப் சிங். இந்த வறுமையான குடும்ப சூழலிலும் தனது வீடாமுயற்சியுடனமும் தன்னம்பிக்கையுடனும் படித்தார். இந்நிலையில் அவர் இந்தாண்டு யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 93வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதுகுறித்து பிரதீப் சிங், “நான் கல்லூரி முடித்தவுடன் முதலில் என்னுடைய அண்ணனை போல் தனியார் நிறுவன வேலைக்கு செல்லாம் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய தந்தையும் அண்ணனும் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறினர். அதனால் யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராக டெல்லி சென்றேன். அங்குப் படிக்க கட்டணம் அளிப்பதற்காக என் தந்தை எங்களுடைய வீட்டை விற்றார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகள் நான் மிகவும் சிரமத்துடன் தான் படித்தேன். தற்போது தேர்வில் வெற்றிப் பெற்றவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மேலும் என்னுடைய குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதீப்பின் இந்தச் சாதனை குறித்து அவரது தந்தை மனோஜ் சிங், “என்னுடைய குடும்ப நலனுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு பீகாரிலிருந்து இந்தூருக்கு நான் குடிபெயர்ந்தேன். அது முதல் நாங்கள் நிறையே கஷ்டங்களை சந்தித்தோம். அவை அனைத்தும் தற்போது என் மகன் பெற்ற வெற்றியால் மறைந்துவிட்டது. நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.