இந்தியா

யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்காவிட்டால் அபராதம் - மத்திய அரசு எச்சரிக்கை

யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்காவிட்டால் அபராதம் - மத்திய அரசு எச்சரிக்கை

jagadeesh

ரூபே டெபிட் கார்டு மற்றும் UPI மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்வதை வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவத்தனையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேல் வர்த்தகம் செய்யும் வணிக நிறுவனங்கள், ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டமைப்பை வர்த்தககர்கள் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சகம், தவறும்பட்சத்தில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ரூபே மற்றும் யூபிஐ மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட எம்டிஆர் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.